ADDED : ஜூலை 27, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செந்துறை: குடகிப்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் தேவாங்கு பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. ரோட்டரி துணை கவர்னர் சர்மிளா பாலகுரு தலைமை வகித்தார்.
வனச்சரக அலுவலர்கள் ஆறுமுகம், முருகேசன், ராம்குமார், முன்னாள் ஊராட்சி தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர்.சேடோ தொண்டு நிறுவன நிர்வாக இயக்குநர் சோனைமுத்து வரவேற்றார். தேவாங்கு பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஆராய்ச்சி ஆய்வாளர் மாரியப்பன்,நீலகிரிஸ் நிலப்பரப்பு அமைப்பு துணை தலைவர் பூமிநாதன் கலந்து கொண்டனர்.