ADDED : பிப் 11, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஆண்டு தோறும் பிப்.9ல் அரசு தரப்பில் ரத்தசோகையை தடுக்கும் விதமாக பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
இதையொட்டி திண்டுக்கல் மாநகராட்சியில் அரசு,தனியார் என 85 பள்ளிகளில் படிக்கும் 75,000 மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. கமிஷனர் ரவிச்சந்திரன்,மாநகர நல அலுவலர் பரிதாவாணி இதற்கான பணிகளை செய்தனர்.