ADDED : பிப் 11, 2026 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை வட்டாரத்தில் பள்ளிகள், கல்லுாரிகள், அங்கன்வாடி மையங்களில் இருக்கும் மாணவர்கள், குழந்தைகளுக்கு தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு 37,299 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி நடந்தது. வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த துவக்க விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் நாகேந்திரன் தலைமை வகித்தார்.
தலைமை ஆசிரியர் காந்திமதி முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், சமுதாய செவிலியர் லதா, சந்திரசேகர் பங்கேற்றனர்.

