ADDED : ஏப் 09, 2026 04:05 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக நிரந்தர சார் பதிவாளர் இல்லாமல் பலரும் மாற்றுப் பணியாக சில நாட்கள் பணிபுரிவதும், செல்வதுமாக உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் மாற்று பணியாக வந்த ஒருவர் உள்நோக்கத்துடன் ஏராளமான பத்திரங்களை கிடப்பில் வைத்தும் உள்ளூர் பத்திர எழுத்தர்களை தவிர்த்து அலைகழிப்பு செய்வதும், வெளியூர் எழுத்தர்களுக்கு முன்னுரிமை தந்து செயல்பட்டதால் அவர் மீது குற்றச்சாட்டுகளை கூறி எழுத்தர் சங்கம் சார்பில் வடமதுரை போலீசில் புகார் தந்தனர். இதனிடையே இங்குள்ள குறைகளை நீக்க கோரி எழுத்தர், ஆலோசகர்கள் தங்களது அலுவலங்களை மூடிவிட்டு நேற்று 2வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தினர்.
