sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 டிஜிட்டல் கிராப் சர்வே பணி மாநில அலுவலர் ஆய்வு

/

 டிஜிட்டல் கிராப் சர்வே பணி மாநில அலுவலர் ஆய்வு

 டிஜிட்டல் கிராப் சர்வே பணி மாநில அலுவலர் ஆய்வு

 டிஜிட்டல் கிராப் சர்வே பணி மாநில அலுவலர் ஆய்வு


ADDED : ஜன 24, 2026 05:42 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஜெயபாண்டியன் கொடைக்கானல் வட்டாரம் உட்பட மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் நேரடி ஆய்வு செய்து ஜன.27க்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மாவட்டத்தில் துல்லியமான நில ஆவணங்களை உருவாக்குதல், பயிர் சாகுபடி விவர தரவுகளை கண்டறிந்து ஆவணப்படுத்துதல், அரசுத் திட்டங்களை நேரடியாக விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளுடன், ட்ரோன்' மூலம் நில அளவுகளை கணக்கிடும் பணிகளும் இதில் அடங்கும்.

109 வருவாய் கிராமங்களில் முதற்கட்டமாக துவக்கப்பட்ட இப்பணிகள் தற்போது மாவட்ட முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் மாவட்டங்கள் தோறும் கண்காணிப்பு அலுவலர்களாக இணை இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரிகளை அரசு நியமித்தது. இவ்வாறு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஜெயபாண்டியன் கொடைக்கானல் உட்பட 14 வட்டாரங்களில் டிஜிட்டர் கிராப் சர்வே பணிகளையும் கண்காணித்து வருகிறார். ஜன.27க்குள் இப்பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us