/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் காங்., தலைவர் மீது காங்., கவுன்சிலர் மோசடி புகார்
/
திண்டுக்கல் காங்., தலைவர் மீது காங்., கவுன்சிலர் மோசடி புகார்
திண்டுக்கல் காங்., தலைவர் மீது காங்., கவுன்சிலர் மோசடி புகார்
திண்டுக்கல் காங்., தலைவர் மீது காங்., கவுன்சிலர் மோசடி புகார்
ADDED : அக் 14, 2025 04:34 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்., தலைவர் மணிகண்டன் தன்னிடம் இருந்து சொகுசு கார், பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக மாநகராட்சி காங்., கவுன்சிலர் கார்த்திக் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார் .
திண்டுக்கல் மாநகராட்சி 21வது வார்டு காங், கவுன்சிலர் கார்த்திக். இவர் திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்., தலைவர் மணிகண்டன் மீது எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதில் மாவட்ட காங்.,தலைவரான மணிகண்டன் வெளியூர் சென்று வருவதாக கூறி எனது காரை வாங்கி சென்றார். காரை ஒப்படைக்கவில்லை. நேரடியாகவும் ,வங்கி மூலமும் ரூ.பல லட்சம் வாங்கி உள்ளார். கார், பணத்தை கேட்ட போது அடியாட்களை வைத்து மிரட்டு கிறார்.
இதுதொடர்பாக செப்.,ல் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. கேரள மாநில பதிவு எண் கொண்ட வெள்ளை நிற காரை கருப்பு நிறமாக மாற்றி போலி பதிவெண்ணுடன் பயன்படுத்தி வருகிறார்.
அவரிடம் விசாரணை நடத்தி கார், பணத்தை மீட்டு தரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மாநகர் மாவட்ட காங்., தலைவர் மணிகண்டன் கூறியதாவது: கவுன்சிலர் கார்த்திக் ஏற்கனவே கொடுத்த புகார் மீது போலீஸ் விசாரணை நடத்திவிட்டனர். அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் எல்லாம் போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் எனக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடு கிறார்.
அவர் மீது கட்சிரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மீது தலைமை முடிவெடுக்கும். அவருக்கு ஏற்பட்டிருக்கும் தனிப்பட்ட கடன் பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் இதுமாதிரி பொய்யான குற்றச்சாட்டுகள் கூறி அனுதாபம் தேடப்பார்க் கிறார் என்றார்.