/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருநெல்வேலி கலெக்டரான திண்டுக்கல் டாக்டர்
/
திருநெல்வேலி கலெக்டரான திண்டுக்கல் டாக்டர்
ADDED : பிப் 12, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை:திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் பிறந்து கால்நடை டாக்டர்கராக பணியாற்றி குரூப் -1 தேர்வில் தேர்ச்சி பெற்ற சுகுமார் தற்போது திருநெல்வேலி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.
குஜிலியம்பாறை அய்யாக் கண்ணுாரை சேர்ந்தவர் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் 75. இவரது இளைய மகன் சுகுமார் 50. பி.வி.எஸ் .சி., படிப்பை முடித்த இவர் செந்துறையில் அரசு டாக்டராக பணியாற்றினார்.
குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று ஆர்.டி.ஓ., டி. ஆர்.ஓ., ஆனார்.
2024ல் ஐ.ஏ.எஸ்., அந்தஸ்துடன் கூடிய ஹிந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையராக பதவி வகித்தார். தற்போது திருநெல்வேலி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

