தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தலைமுறைகள் கடந்தும் மாறாத வலிமையுடன் திண்டுக்கல் பூட்டுக்கள்

தலைமுறைகள் கடந்தும் மாறாத வலிமையுடன் திண்டுக்கல் பூட்டுக்கள்

தலைமுறைகள் கடந்தும் மாறாத வலிமையுடன் திண்டுக்கல் பூட்டுக்கள்


UPDATED : அக் 18, 2026 06:23 AM

ADDED : அக் 18, 2026 06:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2026 06:23 AM ADDED : அக் 18, 2026 06:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் என்றதும் முதலில் அனைவரது நினைவுக்கு வருவது இங்கு தயாராகும் பூட்டுக்கள் தான். பாதுகாப்பின் உன்னத அடையாளமாய், திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாய் இப்பூட்டுக்கள் விளங்குகின்றன.

திண்டுக்கல் பூட்டுத் தொழிலுக்கு 400 ஆண்டுகால வரலாற்றுப் பின்னணி உள்ளது. இத்தொழிலை மேம்படுத்த 1958ல் திண்டுக்கல் பூட்டுத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது. இப்பூட்டுக்களின் தனித்துவமான தரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் மகுடம் சூட்டும் விதமாக கடந்த 2019ல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

திண்டுக்கல் பூட்டின் மிகப்பெரிய சிறப்பே அதன் தொழில்நுட்பம் தான். சில பூட்டுகளை பூட்டுவதற்கு ஒரு சாவி, திறப்பதற்கு வேறொரு சாவி தேவைப்படும். இதுபோன்ற சிறப்பம்சங்களுடன் பூட்டுக்கள் தயாராகின்றன.

பழநி தண்டாயுதபாணி கோயில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ளிட்ட பல்வேறு புகழ் பெற்ற திருக்கோயில்களின் பாதுகாப்பு அரணாக இன்றளவும் திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்ட பூட்டுகள் தான் திகழ்கின்றன.

இங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பூட்டுக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள மக்கள் 400 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக பூட்டுத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு ஸ்டீயரிங் பூட்டு, இரும்புப் பெட்டி பூட்டு, மணி பூட்டு, மாஸ்டர் லாக் பூட்டு, இரட்டைத் தாள் பூட்டு, நான்கு சாவி பூட்டு, முள்ளொத்து பூட்டு, மாங்காய் பூட்டுகள், 8, 10, 15 இன்ச் தொட்டி பூட்டுகள் என 120-க்கும் மேற்பட்ட வகைகளில் பூட்டுக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர கோயில்களுக்காக 25 கிலோ எடை வரை பெரிய அளவிலான பூட்டுகள் பிரத்தியேகமாகவும், தனித்துவமாகவும் தயாரிக்கப்படுகிறது. தற்போது 50 கிலோ எடை கொண்ட பூட்டுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இத்தொழிலில் பாரம்பரிய நுணுக்கங்கள் மாறாமல், உற்பத்தியை வேகப்படுத்த நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும். இளைஞர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அரசும் இதற்கு தேவையான பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும் என்று சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். தலைமுறைகள் பல கடந்தும் மாறாத வலிமையுடன் திகழும் திண்டுக்கல் பூட்டுக்களின் நுணுக்கத்தை அடுத்த தலைமுறைக்கு அறியப்படுத்தவது அவசியமாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us