/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் மாசி திருவிழா ரத்து பானை வியாபாரிகள் கவலை
/
திண்டுக்கல் மாசி திருவிழா ரத்து பானை வியாபாரிகள் கவலை
திண்டுக்கல் மாசி திருவிழா ரத்து பானை வியாபாரிகள் கவலை
திண்டுக்கல் மாசி திருவிழா ரத்து பானை வியாபாரிகள் கவலை
ADDED : பிப் 20, 2025 05:46 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா ரத்தானதால் மண்பானைகளை ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள், வியபாரிகள் கவலையில் உள்ளனர்.
திண்டுக்கல்லில் பிரசித்திபெற்ற கோயிலாக கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது.
தற்போது கும்பாபிேஷக திருப்பணிகள் நடந்து வருவதால் மாசித்திருவிழா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டடுள்ளது.
மாசித்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான மக்கள் தீச்சட்டி எடுக்க மண்பானைகளை வாங்குவர். திருவிழா ரத்தால் பானை உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
வியாபாரிகள் ,உற்பத்தியாளர்கள் கூறியதாவது : திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி, பாறைபட்டி, கம்பிளியம்பட்டி, தருமத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மண்பானை செய்யப்படுகிறது. வழக்கத்தைவிட தொடர்பனிபொழிவு இந்தாண்டு இருந்ததால் உற்பத்தி செய்த பானைகள் விற்பனையாவதில் மந்தம் இருந்தது.
தற்போது மாசித்திருவிழாவும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் கவலையளிக்கிறது. ஆண்டுதோறும் தீச்சட்டிகள் மட்டுமே 3 ஆயிரம் வரை விற்பனையாகும். முன்னரே விவரம் தெரிவிக்கப்பட்டதால் உற்பத்தியை குறைத்து கொண்டோம். வெயில் காலம் தொடங்கி உள்ளதால் மண்பானைகளை மக்கள் தேடினால் ஓரளவிற்கு சமாளிக்க முடியும் என்றனர்.