‘திண்டுக்கல் வாசிக்கிறது’ :விழிப்புணர்வு நிகழ்ச்சி
‘திண்டுக்கல் வாசிக்கிறது’ :விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : அக் 13, 2026 09:24 PM
ADDED : அக் 13, 2026 08:59 PM
திண்டுக்கல்: ‘13வது புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ‘திண்டுக்கல் வாசிக்கிறது’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (அக்.,15) அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்களில் நடக்க உள்ளது’ என கலெக்டர் துர்கா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது:
மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் 13-வது புத்தகக் கண்காட்சி அக்.,22 முதல் நவ.,1 வரை 11 நாட்கள் திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடக்க உள்ளது.
மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பினரின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ‘திண்டுக்கல் வாசிக்கிறது’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை (அக்.,15) காலை 11:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சியின் மூலம் வாசிப்பின் முக்கியத்துவம், 13-வது புத்தகக் கண்காட்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் அனைத்துத் தரப்பு மக்களும் புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று தங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிப் பயன்பெற வேண்டும் என கூறியுள்ளார்.
