sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 விஜய் கறுப்பு பணம் வாங்குவது உண்மை சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

/

 விஜய் கறுப்பு பணம் வாங்குவது உண்மை சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

 விஜய் கறுப்பு பணம் வாங்குவது உண்மை சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

 விஜய் கறுப்பு பணம் வாங்குவது உண்மை சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்


ADDED : பிப் 06, 2026 07:13 AM

Google News

ADDED : பிப் 06, 2026 07:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''த.வெ.க., தலைவர் விஜய் கறுப்புப் பணம் வாங்குவது உண்மை. இதனை கூறிக் கொண்டே இருப்போம்'' என

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது: ஆட்சி முடியும் தருவாயில் பட்ஜெட் தாக்கல் செய்கிறேன் என்பதற்காக மக்கள் வரிப்பணத்தை சுரண்டுவது தி.மு.க.,வின் வாடிக்கை. அமைச்சர் பெரியசாமி விடுதலையான வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க., பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் நேரு, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உட்பட 9 அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட உள்ளனர். தேர்தல் முடிந்த பின் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., அளித்த 525 தேர்தல் வாக்குறுதிகள் புஸ்வானம் ஆகி உள்ளது.இன்னும் நிறைய அறிவிப்பு வர உள்ளது.

அ.தி.மு.க.,வின் வாக்குறுதியை ஏதாவது ஒன்றை குறிப்பிட்டு அதை நிறைவேற்றவில்லை என தெளிவாக கூறாமல் பொதுவாக குறை கூறுவது அமைச்சர் பெரியசாமிக்கு அழகல்ல.

தி.மு.க.,வினர் பொது மக்களுக்கு அண்டா, ஹாட் பாக்ஸ் கொடுக்கிறார்கள். அதன் தரத்தை பரிசோதிக்க வேண்டும். ஹாட் பாக்சில் சுடுதண்ணீர் ஊற்றி வைத்தால் நிறைய நேரம் சூட்டின் திறன் இருக்காது.

100 வீடுகள் என்றால் 10 வீடுகளுக்கு மட்டும் இம்மாதிரியான பொருட்கள் வழங்கப்படுவதால் தி.மு.க.,விற்கு கெட்ட பெயர் வேகமாக பரவுகிறது.

பணம் கொடுத்தாலும் கூட பொதுமக்களை இனிமேல் ஏமாற்ற முடியாது. பணத்தை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு மின்சார கட்டணம், சொத்துவரி அனைத்தையும் ஏற்றிவிட்டனர். இதனால் பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். விஜய் கறுப்புப் பணம் வாங்குவது உண்மை. இதனை கூறிக் கொண்டே இருப்போம். நாங்கள் மட்டும் அல்ல தி.மு.க., அமைச்சர்கள்,நிர்வாகிகள் இதை பேசியிருக்கிறார்கள். இதற்கு விஜயோ, செங்கோட்டையனோ பதில் கூறவே இல்லை. தேர்தலில் 210 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெறும் என்றார்.






      Dinamalar
      Follow us