தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மாநில சப் ஜூனியர் வூசு போட்டிசாதித்த திண்டுக்கல் மாணவர்கள்

மாநில சப் ஜூனியர் வூசு போட்டிசாதித்த திண்டுக்கல் மாணவர்கள்

மாநில சப் ஜூனியர் வூசு போட்டிசாதித்த திண்டுக்கல் மாணவர்கள்


ADDED : செப் 07, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், செப்.8

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லுாரி உள்விளையாட்டு அரங்கில் 23வது மாநில அளவிலான சப்-ஜூனியர் வூசு சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் பயிற்றுநர்கள் ஸ்ரீ, சுபஸ்ரீ, ரேகிதா தலைமையில் 35 மாணவ, மாணவிகள் பங்கேற்று திறன்களை வெளிப்படுத்தினர்.

தவுலு மாணவர் ‘ஓவர் ஆல்’ பிரிவில் திண்டுக்கல் அணி 8 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 73 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. வேலுார் அணி 71 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், சேலம் 37 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பெற்றன. தவுலு மாணவிகள் ‘ஓவர் ஆல்’ பிரிவில் திண்டுக்கல் அணி 10 தங்கம், 5 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 76 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. கோயம்புத்துார் 59 புள்ளிகளுடன் இரண்டாமிடமும், சேலம் 51 புள்ளிகளுடன் மூன்றாமிடமும் பெற்றன. இதன் மூலம் திண்டுக்கல் அணி 49 பதக்கங்களை வென்று இரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்று ‘சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்’ கோப்பையை வென்று சாதனை படைத்தது.

வீரர், வீராங்கனைகளை திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கத்தின் செயலாளர் ஜாக்கி ஷங்கர், பொருளாளர் கவிதா, தமிழ்நாடு வூசு சங்கத்தின் செயலாளர் ஜான்சன், துணைச்செயலாளர் ரவி, பொருளாளர் கோபி, ஸ்ரீபரமகல்யாணி கல்லுாரியின் செயலாளர் சுந்தரம் ஆகியோர் கோப்பையை வழங்கி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us