/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இருளில் மூழ்கிய திண்டுக்கல் புறநகர், நுழைவு பகுதிகள்: தவியாய் தவிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள்
/
இருளில் மூழ்கிய திண்டுக்கல் புறநகர், நுழைவு பகுதிகள்: தவியாய் தவிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள்
இருளில் மூழ்கிய திண்டுக்கல் புறநகர், நுழைவு பகுதிகள்: தவியாய் தவிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள்
இருளில் மூழ்கிய திண்டுக்கல் புறநகர், நுழைவு பகுதிகள்: தவியாய் தவிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள்
ADDED : டிச 23, 2025 07:27 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் புறநகர், நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலுமே விளக்குகள் இல்லாமல் வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாடண்ட், முக்கிய ரோடுகளை தவிர புறநகர் பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் போதிய தெரு விளக்குகள் இல்லாத நிலை நீண்ட நாட்களாக தொடர்கிறது.
மாநகராட்சி ஒரு சில பகுதிகளை தவிர்த்து ஊராட்சி பகுதிகளில் முழுவதுமாக இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பள்ளப்பட்டி, செட்டிநாயக்கன்பட்டி என பல இடங்களில் தெரு விளக்கு வசதிகள் போதிய அளவில் இல்லை.
பைபாஸ் ஒட்டி வளர்ந்து வரும் பகுதிகளாக இவை இருப்பதால் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்
திண்டுக்கல் நகருக்குள் நுழைவுப்பகுதிகளாக உள்ள திண்டுக்கல் - - மதுரை ரோடு, திருச்சி ரோடு, வத்தலகுண்டு ரோடு என அனைத்து பகுதிகளிலுமே போதிய வெளிச்சம் இல்லை.
குறிப்பாக மதுரைரோடு சவேரியார் பாளையம் தொடங்கி தோமையார்புரம் வரை ஒன்றரை கி.மீ., பகுதியில் ரோட்டோர இருபுறம் விளக்குகள் இல்லாததால் இருள் அதிகளவில் உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளா கின்றனர். திருச்சி ரோட்டில் ஆயுதப்படை மைதானத்திலிருந்து நேருஜி நகர் மேம்பாலம் வரை போதிய வெளிச்சம் இல்லை. இதனால் குடியிருப்பு வாசிகள், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
இருளை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது.
சில நேரங்களில் ரோட்டோரங்கள் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி விடுகிறது. இரவு 7:00 மணிக்குமேல் இந்த பகுதிகளில் செல்வதற்கே பெண்கள், முதியவர்கள் அச்சத்திற்கு உள்ளாகின்றனர்.
இருளின் காரணமாக மேடு, பள்ளங்கள், வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் சில வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவதும் வாடிக்கையாகி வருகிறது. ரோட்டோரத்தில் நடந்து செல்வோர் மீதும் வாகனங்கள் விபத்தை ஏற்படுத்தி விடுகின்றன.
முகம் சுளிக்கும் வெளியூர் மக்கள்
சதீஷ்குமார், மாவட்ட செயலாளர், தேசிய மொழிகள் பிரிவு, பா.ஜ., திண்டுக்கல்: இருளை பயன்படுத்தி இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகள் உட்பட பலவற்றையும் ரோட்டோரம் கொட்டிச் செல்கின்றனர்.
இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதோடு வெளியூர் மக்கள் முகம் சுளிக்கும் நிலை திண்டுக்கல்லில் ஏற்படுகிறது. வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது. வேகத்தடைகள் இருப்பது கூட தெரியவில்லை.அந்தளவு இருள் சூழந்து காணப்படுகிறது .
கூடுதல் கவனம் செலுத்தலாம்
சங்கர்குமார், சமூக ஆர்வலர், திண்டுக்கல்: நகரின் நுழைவு வாயில்களே இருள் சூழ்ந்துதான் காணப்படுகிறது. விளக்குகள் அமைத்து போதிய வழிகாட்டல் பலகைகள் வைக்க வேண்டும்.
குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அவ்வப்போது போலீசார் ரோந்து மேற்கொள்ள வேண்டும். சிசிடிவிக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும்.
புறநகர் பகுதிகளில் தான் அதிக குற்ற சம்பவங்கள் நடக்கின்றன. எனவே அவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

