/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தென்னிந்திய ஹாக்கியில் திண்டுக்கல் அணி வெற்றி
/
தென்னிந்திய ஹாக்கியில் திண்டுக்கல் அணி வெற்றி
ADDED : ஜன 27, 2024 04:54 AM

திண்டுக்கல், : திண்டுக்கல் ஆர்.வி.நகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கெயின்அப் டெக்னோ நிறுவனம், மாவட்ட ஹாக்கி விளையாட்டு சங்கம் சார்பில் தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி எம்.பி., வேலுச்சாமி தலைமையில் துவங்கியது.
மேயர் இளமதி, துணைமேயர் ராஜப்பா, முன்னிலை வகித்தனர். திண்டுக்கல், காரைக்குடி, ராஜபாளையம், மதுரை, சேலம் மாவட்டங்களில் இருந்து 21 அணிகள் பங்கேற்றது.
நாளை வரை நடைபெற உள்ள இந்த போட்டியின் முதல் நாளான நேற்று நடந்த போட்டியில் திண்டுக்கல் கெயின்அப் டெக்னோ அணி ஈரோடு செங்குந்தர் கல்லுாரி அணியை 2:3 என்ற புள்ளி வித்தியாசத்தில் வென்றது.
தி.மு.க மாநகர பொருளாளர் சரவணன், மேற்கு பகுதி அவை தலைவர் கண்ணன், செயலாளர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் சதீஷ், ஹாக்கி சங்க நிர்வாகி ராமானுஜம், மாவட்ட ஹாக்கி சங்க நிறுவனர் ஞானகுரு பங்கேற்றனர்.
ஹாக்கி சங்க தலைவர் இந்திரா துவாரகநாதன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்.

