/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருங்கைக்காயால் பெண்களிடம் திட்டு நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பாக்கியராஜ்

ADDED : ஜன 01, 2025 05:20 AM
ஒட்டன்சத்திரம்: முருங்கைக்காயால் பேரும் புகழுடன் திட்டும் சேர்த்து கிடைத்ததாக''நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் தெரிவித்தார்.
ஒட்டன்சத்திரத்தில் நடந்த ஓர் விழாவில் அவர் பேசியதாவது: முருங்கைக்காயின் மகத்துவத்தை பாட்டியின் மூலம் தெரிந்து கொண்டேன். அதனை தக்க நேரத்தில் பயன்படுத்த முடிவு செய்து காத்திருந்தேன்.
குடும்ப படமான முந்தானை முடிச்சு திரைப்படத்தில் முருங்கையின் மகத்துவத்தை பயன்படுத்தி கொண்டேன்.
இங்கு (ஒட்டன்சத்திரம்)வந்து பார்த்த பின்பு தான் முருங்கையில் இத்தனை சத்துக்கள் உள்ளதை தெரிந்து கொண்டு வியப்படைந்தேன்.
முருங்கைக்காயால் பேரும் புகழும் கிடைத்த போதிலும் அதனால் திட்டும் கிடைத்தது.
பெண்கள் கடைகளுக்கு சென்று முருங்கைக்காய் வேண்டும் என கூறாமல் அந்த காய் வேண்டும் என தெரிவித்து என்னை திட்டி தீர்த்தனர் என்றார்.