ADDED : பிப் 11, 2026 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைபோல் உயர்த்தி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், ஜோசப் ஸ்டாலின், சரவணக்குமார், ராமுத்தாய் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பகத்சிங் பேசினார். தொடர்ந்து அவர்கள் பஸ் ஸ்டாண்ட் முன் அமர்ந்து மறியல் செய்தனர்.
அனுமதி இன்றி ரோடு மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 480 பேரை போலீசார் கைது செய்தனர்.

