தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டிஸ்கோ கத்தரி விலை உயர்வு

டிஸ்கோ கத்தரி விலை உயர்வு

டிஸ்கோ கத்தரி விலை உயர்வு


ADDED : நவ 07, 2025 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் டிஸ்கோ கத்தரி விலை அதிகரித்து கிலோ ரூ.30 க்கு விற்பனையானது.

ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, கள்ளிமந்தையம் சுற்றிய கிராமப் பகுதிகளில் டிஸ்கோ கத்தரி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சமீபத்தில் விளைச்சல் அதிகரித்து மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக இருந்ததால் இக்கத்தரிக்காய் கிலோ ரூ.18க்கு விற்றது. இந்நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக செடிகளில் இருந்த பூக்கள் அழுகி நோய் தாக்குதலுக்கு ஆளானதால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து மூன்றில் இரண்டு பங்காக குறைய கிலோ ரூ.12 அதிகரித்து ரூ.30 க்கு விற்பனையானது.

கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில் ' மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us