/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் உடன்கட்டை நடு கற்கள் கண்டெடுப்பு
/
திண்டுக்கல்லில் உடன்கட்டை நடு கற்கள் கண்டெடுப்பு
திண்டுக்கல்லில் உடன்கட்டை நடு கற்கள் கண்டெடுப்பு
திண்டுக்கல்லில் உடன்கட்டை நடு கற்கள் கண்டெடுப்பு
ADDED : டிச 31, 2025 06:05 AM

தாடிக்கொம்பு: திண்டுக்கல் பேகம்பூர் காளியம்மன் கோயில் பின் சந்து ,திண்டுக்கல் மேற்குரத வீதி தொந்தியா பிள்ளை பள்ளியின் பின்புறம் என இரு இடங்களில் உடன்கட்டை ஏறும் நடு கற்களை வரலாற்று ஆய்வு குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
நோட்டரி பப்ளிக் வடிவேல் தகவல்படி நடு கற்களை கண்டெடுத்த திண்டுக்கல் வரலாற்று ஆய்வாளர் நா.தி.விஸ்வநாததாஸ், மாணவர் ரத்தின முரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், ஆனந்து, உமா மகேஸ்வரன், பெருமாள்சாமி ஆய்வு செய்தனர்.
இதை தொடர்ந்து இவர்கள் கூறியதாவது: இந்தியாவில் முந்தைய காலத்தில் கணவன் இறந்து விட்டால் மனைவியும் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற நடைமுறை வழக்கத்தில் இருந்துள்ளது. இந்த நடுகல்லில் வீரனும் அவரது மனைவியும் நின்ற நிலையில் உள்ளனர்.
இவரின் கொண்டை வலது புறம் சரிந்து வீரனின் கொண்டையில் உள்ளது போல் அணிமணியும், நெற்றியில் நெற்றி சூடியும் உள்ளது.
வீரனின் தலைக்கு மேல் வாள் துாக்கிய நிலையில் உள்ளது சண்டையில் இறந்ததை குறிக்கிறது.
வீரனின் மனைவி கையில் உள்ள மதுக் குடுவை அவர் இறந்ததும் அவரின் மனைவி உடன்கட்டை ஏறியதை குறிக்கிறது. இந்த நடுகல்லின் காலம் 13 , 14-ம் நுாற்றாண்டை குறிப்பிடுகிறது .
மேற்கு ரத வீதியில் கண்டெடுத்த நடுகல் வீரனின் தலை கொண்டை இடது புறம் சரிந்தும் முகத்தில் முறுக்கிய மீசையும் , இரு கைகளும் கூப்பி வணங்கிய நிலையில் இடது கால் மடக்கியும் வலது கால் தரையில் ஊன்றியும் சுகாசன நிலையில் உள்ளார்.
வீரனின் மனைவியின் கொண்டை இடதுபுறம் சரிந்தும் நெற்றியில் நெற்றிசூடியும் அதிலிருந்து இணைந்து காது வரை வரும் ஆபரணம், காதுகளில் வளையம் இடையாடை அணிந்து வீரனைப் போல் அமர்ந்து சுகாசன நிலையில் இரு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் உள்ளார். இவரின் அருகே மதுகுடுவை வைத்த நிலையில் உள்ளது.வீரன் அமைதி காலத்தில் இருந்தபின் அவர் மனைவி உடன்கட்டை ஏறி உள்ளார். இந்த நடுகல் 17 ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என்றனர்.

