/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அலைக்கழிக்கப்பட்ட சின்னாளபட்டி வியாபாரிகள்
/
அலைக்கழிக்கப்பட்ட சின்னாளபட்டி வியாபாரிகள்
ADDED : நவ 07, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: சின்னாளபட்டியில் காமராஜர் சாலையில் அண்ணா தினசரி மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் அருகே உழவர் சந்தை என இரு இடங்களில் காய்கறி விற்பனை நடந்தது. அண்ணா தினசரி மார்க்கெட் முழுமையாக அகற்றப்பட உள்ளது. இதற்காக அங்கிருந்த வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து வியாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்தை திரண்டனர். செயல் அலுவலர் இளவரசி பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்று இடம் தேர்வு செய்யும் வரை ரோட்டோரங்களில் வியாபாரம் செய்ய அனுமதித்ததால் வியாபாரிகள் கலைந்தனர்.