ADDED : பிப் 15, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் கே.கே. ஏ.ஜி., பள்ளியில் 2 நாட்கள் நடக்கும் மாவட்ட கேரம் போட்டி நேற்று துவங்கியது.
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், மேற்கு ரோட்டரி, நாடார் உறவின்முறை கே.கே., அய்யநாடார் கங்காமிர்தம்மாள் மெட்ரிகுலேசன் பள்ளி சார்பில் கோபாலகிருஷ்ணநாயுடு காவேரிம்மாள் நினைவு மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டி கே.கே. ஏ.ஜி., பள்ளியில் 2 நாட்கள் நடக்கிறது. 12, 14, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு ஆண், பெண்களுக்கு தனத்தனியே ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடத்தப்படுகிறது.
நேற்று (பிப்.14) துவங்கிய போட்டியில் மாணவர்களுக்கான ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடந்தன. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான அணியினர் கலந்து கொண்டனர். இன்று மாணவிகளுக்கு போட்டிகள் நடக்கின்றன.
