/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாளை துவங்குகிறது மாவட்ட கேரம் போட்டி
/
நாளை துவங்குகிறது மாவட்ட கேரம் போட்டி
ADDED : அக் 10, 2025 03:24 AM
திண்டுக்கல்: மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை (அக். 11)- முதல் இரு தினங்கள் திண்டுக்கல்லில் நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் , கோட்டை ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் 10ம் ஆண்டு சின்னாபிள்ளை ராஜாமணியம்மாள் நினைவு மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை , நாளை மறுதினம் என இரு நாள் நடக்கிறது. திண்டுக்கல் பிரசித்தி வித்யோதயா பள்ளியில் 12, 14 ,18 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக ஒற்றையர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் 4 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டைகர், மதிய உணவு , பள்ளிச்சீருடையுடன் வர வேண்டும். நாளை (அக்.11) மாணவர் , அக். 12 ல் மாணவிகளுக்கு போட்டிகள் நடைபெறுகிறது. அணிப்பதிவுக்கு இன்று(அக்.10) இறுதி நாளாகும் .விவரங்களுக்கு 97860 61985. 78457 89569 ல் அணுகலாம். ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்க செயலாளர் ஆல்வின் செல்வக்குமார் செய்துள்ளார்.