/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிகள்
/
மாவட்ட கிரிக்கெட் லீக் போட்டிகள்
ADDED : பிப் 19, 2026 06:00 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் திண்டுக்கல் டிராகன், பிரசித்தி வித்யோதயா, ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட் சுழற்கோப்பைகளுக்கான டேக் - டி.டி.சி.ஏ., லீக் கிரிக்கெட் போட்டி'கள் ஆர்.வி.எஸ்., பி.எஸ்.என்.ஏ., ஸ்ரீ.வி., கல்லுாரி மைதானங்களில் நடந்தது.
ஒட்டன்சந்திரம் நைக் கிரிக்கெட் கிளப் அணி 40.1 ஓவர்களில் 185 ரன்கள் (சரவண ஆதித்தன் 58, அசரங்கா 5 , ஜெயந்த் 3 விக்கெட்கள்) எடுத்து ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் ஜூனியர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 29.3 ஓவர்களில் 137 (ஹேமந்த் 27, விக்னேஷ்வரன் 4 விக்கெட்கள்) ரன்கள் எடுத்து ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.
திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவர்களில் 319/7 ரன்கள் (ஜெயந்த் 59, ஹேமந்த் 29, ஸ்ரீமுகேஷ்வரன் 72, மணிகண்டன் 44, மாறன் 29, மகேஸ்வரன் 34, நாட் அவுட்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பிளே பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 46 ஓவர்களில் 183/8 ரன்கள் (சசிக்குமார் 62 நாட் அவுட், கனவாஇப்ராகிம்ஷா 63, அசரங்கா 5 விக்கெட்கள் ) எடுத்து 136 ரன்கள் வித்தியாசத்தில்தோல்வி அடைந்தது.
வேடசந்துார் ஜாஹீர் கிரிக்கெட் கிளப் அணி 40 ஓவர்களில் 214/8 ரன்கள் (மதன்குமார் 60, நாட் அவுட், அருண்குமார் 77, தீபக்கண்ணா 3 , சல்மான்கான் 4 விக்கெட்கள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய நத்தம் என்.பி.ஆர்., ஜி.ஐ., கிரிக்கெட் கிளப் அணி 40 ஓவர்களில் 200/5 ரன்கள் (சுந்தரவேல் 100, நாட் அவுட், ரமேஷ் 26) எடுத்து தோல்வி அடைந்தது.
திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் லெவன் அணி 25 ஓவர்களில் 182 ரன்கள் (அருண்பிரகாஷ்ராஜ் 42, சிவேஷ்தருண் 3 விக்கெட்கள்) எடுத்து, ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் வெற்றி கிரிக்கெட் கிளப் அணி 22.5 ஓவர்களில் 118 ரன்கள் (கார்த்திக் 4 விக்கெட்கள்) எடுத்து, ஆல் அவுட்' ஆகி, தோல்வி அடைந்தது.
காந்தி கிராம பல்கலை அணி 24.5 ஓவர்களில் 156 ரன்கள் (முத்துவிவேகானந்தர் 53, டோமினிக் சாம்சன் 4 விக்கெட்கள்) எடுத்து ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய ஒட்டன்சத்திரம் சாமுராய் கிரிக்கெட் கிளப் அணி 24.1 ஓவர்களில் 157/5 ரன்கள் (அசைன் 66, முத்துப்பாண்டி 53) எடுத்து வெற்றி பெற்றனர்.
வேடசந்துார் சீனிபாலா கிரிக்கெட் கிளப் அணி 18.5 ஓவர்களில் 68 ரன்கள் (நிர்மல்தீபக் 4 விக்கெட்கள்) எடுத்து ஆல் அவுட்' ஆனது.
எதிர்த்து விளையாடிய பாம்பார்பட்டி எய்ம் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி 10 ஓவர்களில் 69/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் பாரத் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 142/8 ரன்கள் (புனிதன் 30, வீரமணி 31, பாஸ்கரன் 3 விக்கெட்கள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் ஸ்கை கிரிக்கெட் கிளப் அணி 19.4 ஓவர்களில் 143/2 ரன்கள் (பாலமுருகன் 74, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.

