ADDED : மார் 13, 2026 06:47 AM
திண்டுக்கல்: மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டேக் - டி.டி.சி.ஏ., பிரசித்தி வித்யோதயா, ஓட்டல் பார்சன்ஸ் கோர்ட், மதுஸ்கேன்ஸ் ஸ்பெஷாலிட்டி லேப் சுழற்கோப்பைகளுக்கான மாவட்ட 'லீக்' கிரிக்கெட் போட்டி நடந்தது.
திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., எஸ்.சி., அணி 22.1 ஓவர்களில் 174 ரன்கள் (ஹரிகிருஷ்ணன் 41, கணேஷ்மூர்த்தி 32, நாட்அவுட், உதயகுமார் 3/38, ஆனந்தராம் 3/19) எடுத்து ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய பாப்பம்பட்டி எய்ம்ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி 21.1 ஓவர்களில் 140 ரன்கள் (நிர்மல் தீபக் 42, ராஜ்குமார் 28, திவாகரன் 34, அருண்குமார் 37) எடுத்து ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.
ஒட்டன்சத்திரம் சாமுராய் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 149/6 ரன்கள் (அசைன் 47, பி.மணிகண்டன் 38, நாட்அவுட்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய அய்யலுார் கிரிக்கெட் கிளப் அணி 22.1 ஓவர்களில் 153/3 ரன்கள்(எஸ்.மணிகண்டன் 38, கவுதம் 73, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் வல்கனோ ரைடர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 23 ஓவர்களில் 123 ரன்கள் (சந்தோஷ்குமார் 30, சக்திவேல் 21,முத்துவிவேகானந்தர் 17) எடுத்து ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய சின்னாளபட்டி காந்திகிராம பல்கலைஅணி 18.5 ஓவர்களில் 127/3 ரன்கள் (நிர்மலேஸ்வர் 76, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.
திண்டுக்கல் ஆரஞ்ச் சர்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 30 ஓவர்களில் 184/8 ரன்கள் (விஸ்வநாதன் 29, தனபால் 63,புகழேந்திரன் 19, பெரியசாமி 33) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் வெற்றி கிரிக்கெட் கிளப் அணி 22.2 ஓவர்களில் 90 ரன்கள் (அகின் 51, பானுவலாட்டி 10, வெங்கடேஸ்வரன் 14) எடுத்து, ஆல் அவுட்' ஆகி தோல்விஅடைந்தது.
பழநி சுப்ரமண்யா கிரிக்கெட் கிளப் அணி 21.1 ஓவர்களில் 110 ரன்கள் (முகமதுயாஷின் 4/34) எடுத்து ஆல் அவுட்'ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் ஸ்கை கிரிக்கெட் கிளப் அணி 23.5 ஓவர்களில் 113/6 ரன்கள் (ராஜேஷ்குமார்28) எடுத்து வெற்றி பெற்றது.திண்டுக்கல் சாம்பியன்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 14.1 ஓவர்களில் 59 ரன்கள் (சண்முகசுந்தரம் 26, விஜய்கண்ணன் 6)எடுத்து, ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் ஏஞ்சல் கேஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 7.2ஓவர்களில் 60/3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.திண்டுக்கல் சாம்பியன்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 138/9 ரன்கள் (விக்னேஷ் 60, நாட் அவுட், கணேசன் 29)எடுத்தது. எதிர்த்து விளையாடிய கொடைக்கானல் எங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 125/7 ரன்கள் (பாலமுருகன் 30, கணேசன் 30, நாட் அவுட், கஜேந்திரன் 21) எடுத்து தோல்வி அடைந்தது.
