ADDED : டிச 28, 2025 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க., மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி திண்டுக்கல் - பழநி ரோடு காந்திஜி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியது.
எம்.எல்.ஏ.,செந்தில்குமார் துவக்கி வைத்தார். 13, 15 வயதுக்குட்பட்ட ஆண், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடக்கிறது.
இதில், தி.மு.க., மாநகரச்செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி, மாவட்ட கால்பந்து கழக துணை செயலாளர் ஈசாக், தி.மு.க., நிர்வாகிகள் காமாட்சி, பிலால் உசேன், சரவணன் கலந்து கொண்டனர்.

