வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : செப் 11, 2026 09:33 PM
திண்டுக்கல், செப்.12
தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழும திட்ட இயக்குநரும், திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனீஸ்சேகர், கலெக்டர் துர்கா முன்னிலையில் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், குடிநீர் வழங்கல், சுகாதாரப் பணிகள் குறித்து களஆய்வு செய்தார்.
முதல்வர் விஜய் விரைவில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கப் பணிகளை துவக்கி வைக்க உள்ளார். இதற்காக மாநகராட்சி அரசினர் மேல்நிலைப் பள்ளி, நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளிகளில் நடந்து வரும் முன்னேற்பாடுகள் குறித்தும், மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்கப்பட உள்ளதை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தங்க மோதிரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு வைப்பறையை ஆய்வு செய்தார்.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் கங்காதாரணி, மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த், திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை முதல்வர் சரவணன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பாரதி, மாவட்ட சுகாதார அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
