ADDED : ஆக 11, 2025 04:07 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட டேக்வாண்டோ அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான மாவட்ட டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.
நத்தம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் தலைவர் கமலஹாசன், செயலாளர் ஜோதிபாசு, தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தனர். திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், உடுமலை, வடமதுரை, கொடைக்கானல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
10, 12, 8 கிலோ எடைப்பிரிவில் 4 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிப்பெற்றோர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்கள், அடுத்தக்கட்டமாக திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெறும் மாநிலப்போட்டிக்கு தேர்தெடுக்கப்பட்டனர்.
