தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ.,  கிரிக்கெட் லீக் போட்டிகள்

மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ.,  கிரிக்கெட் லீக் போட்டிகள்

மாவட்ட டேக் - டி.டி.சி.ஏ.,  கிரிக்கெட் லீக் போட்டிகள்


ADDED : மார் 26, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் ‛லீக்' போட்டிகள் நடந்தன.

பழநி யுவராஜ் எங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 45 ஓவர்களில் 247/7 ரன்கள் (பேரறிவாளன் 57, சுதீஸ் 28, துர்கைநாதன் 43, மகேஸ்வரன் 32, பிரதிஸ்குமார் 43, நாட் அவுட், மதன்குமார் 3/50) எடுத்தது. எதிர்த்து விளையாடிய பழநி டாமிநேட்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 30.4 ஓவர்களில் 248/5 ரன்கள் (நஷீர்ஹூசைன் 42, மதன்குமார் 79, கேசவன் 69, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் ஏஞ்சல் கேஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 19.5 ஓவர்களில் 130 ரன்கள் (கார்த்திக் 25, சரவணக்குமார் 25) எடுத்து, ‛ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய கொடைக்கானல் எங்க்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 124 ரன்கள் (ஹரிஹரன் 44, ஜெகதீஸ் 3/18) எடுத்து, ‛ஆல் ஆவுட்' ஆகி தோல்வி அடைந்தது.

திண்டுக்கல் ஏஞ்சல் கேஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 193/9 ரன்கள் (ஸ்டீபன் 34, ரமேஷ் 41, நாட் அவுட், விஜய்கண்ணன் 28, விக்னேஷ் உதயா 3/43) எடுத்தது. எதிர்த்து விளையாடிய கொடைக்கானல் லெவன் அணி 17.4 ஓவர்களில் 97 ரன்கள் (ஊமர் 30, சிவக்குமார் 3/13) எடுத்து, ‛ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.திண்டுக்கல் மெஜஸ்டிக் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 171/5 ரன்கள் (வருண்கிருஷ்ணா 37, அன்புப்பாண்டி 61, நாட் அவுட்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய கொடைக்கானல் எங்க்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 22.5 ஓவர்களில் 80 ரன்கள் (செந்தில்குமார் 4/18) எடுத்து, ‛ஆல் அவுட்' ஆகி, தோல்வி அடைந்தது.திண்டுக்கல் லெவன் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி 24.5 ஓவர்களில் 109 ரன்கள் (சந்திரசேகர் 35, ரூபன்ராஜ் 3/22, ரஞ்சித்குமார் 3/12, மணிகண்டன் 4/16) எடுத்து, ‛ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய கொடைக்கானல் லெவன் அணி 23.4 ஓவர்களில் 113/7 ரன்கள் (ரூபன்ராஜ் 25, ரஞ்சித்குமார் 26, சந்திரன் 3/28) எடுத்து வெற்றி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us