ADDED : ஏப் 22, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வூசு சங்கம் சார்பில் 18வது சப் ஜூனியர், ஜூனியர், சீனியர்களுக்கான மாவட்ட அளவிலான வூசு போட்டிகள் கூட்டுறவு நகரில் உள்ள வாகைஸ்போர்ட்ஸ் அகாடமியில் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.
சங்க செயலாளர் ஜாக்கி சங்கர், துணைத் தலைவர் கார்த்திக்குமார், சிறப்பு அழைப்பாளர்கள் டெப்பி குரு, சிவகுமார் பங்கேற்றனர்.
பொருளாளர் கவிதா நன்றி கூறினார். தவுலு உட்பட பல பிரிவுகளில் நடந்த போட்டிகளில் முதலிடம் வென்றவர்கள் ஏப். 26, ஏப். 27ல் வேலுாரில் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்பார்கள்.