தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பயன்பாட்டிற்கு வராத நடைபாதை

 பயன்பாட்டிற்கு வராத நடைபாதை

 பயன்பாட்டிற்கு வராத நடைபாதை


ADDED : நவ 29, 2025 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் நகராட்சி சின்னக்குளம் நடைபயிற்சி பாதை ரூ. பல கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் அமைந்துள்ளது சின்ன குளம்.25 ஏக்கரில் இருந்தாலும் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கி காணப்படுகிறது. ஆக்கிரமிப்பை சரிவர அகற்றாமல் வேலி அமைத்து கரைகளில் நகர மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக பேவர் பிளாக் கற்கள் மூலம் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்தும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பேவர் பிளாக் கற்களில் புல் பூண்டுகள் முளைத்து வீணாகி வருகிறது. பல ஆண்டுகளாக இதற்கு ஒரு தீர்வு காணாமல் இருப்பதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு வருகிறது.

பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் கூறுகையில்,''சின்ன குளத்தை துார்வாரி கரைகளை பலப்படுத்தி நகராட்சி மக்கள் நடைபயிற்சி செய்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்ட நடைபாதையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது. இதை திறக்காததால் புல் பூண்டுகள் முளைத்து வீணாகி வருகிறது ''என்றார். மாவட்ட நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அசோசியேஷன் தலைவர் சுரேஷ்குமார் கூறுகையில்,'' மக்கள் வரிப்பணத்தில் பணிகளை நிறைவேற்றிய பின்பும் பயன்பாட்டிற்கு வராமல் திட்டமே முடங்கி விடுகிறது. நடைபயிற்சி செய்ய ஏதுவாக இதை சீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் ''என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us