/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயன்பாட்டிற்கு வராத இறைச்சி கூடம்; தெருக்களில் வதை செய்யும் அவலம்
/
பயன்பாட்டிற்கு வராத இறைச்சி கூடம்; தெருக்களில் வதை செய்யும் அவலம்
பயன்பாட்டிற்கு வராத இறைச்சி கூடம்; தெருக்களில் வதை செய்யும் அவலம்
பயன்பாட்டிற்கு வராத இறைச்சி கூடம்; தெருக்களில் வதை செய்யும் அவலம்
ADDED : டிச 12, 2025 06:49 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் ஆடு, மாடு வதை செய்யும் இறைச்சி கூடம் பயன்பாட்டிற்கு வராமல் தெருக்களில் வதை செய்யும் அவலம் தொடர்கிறது.
சுற்றுலா தலமான கொடைக்கானலில் இறைச்சி பயன்பாடு அதிகளவு உள்ளது.
இவற்றை நகரின் ஒதுக்குப்புறத்தில் வைத்து வதை செய்யும் வகையில் 2022ல் நகராட்சி சென்பகனுார் பழைய குப்பை கிடங்கு பகுதியில் ரூ. 1.30 கோடியில் இறைச்சி கூடம் அமைக்கப்பட்டது. 3 ஆண்டை கடந்தும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.
இதனால் ஆடு, மாடுகள் குடியிருப்பு பகுதியில் வதை செய்யும் போக்கால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வசிக்கும் நிலை உள்ளது.
அண்ணா சாலை, அண்ணா நகர், பாம்பார்புரம், நாயுடுபுரம் என இந்நிலை பரவலாக உள்ளது. வதை செய்யும் ஆடு, மாடுகளின் கழிவு, ரத்தம் சாக்கடையில் விடுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இச்செயலால் காலையில் எழும் குடியிருப்புவாசிகள் உயிரினங்களின் மரண ஓலங்களை கேட்கும் அவலம் தொடர்கிறது. நகராட்சி பயன்பாடின்றி உள்ள இறைச்சி வதைக்கூடம் பணியினை முழுமைப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.