நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவது , வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சமையல் அறையில் உள்ள காஸ் சிலிண்டர் தீ பற்றிக் கொண்டால் எவ்வாறு அணைப்பது, கூட்ட நெரிசலில் சுற்றிக் கொண்டால் தப்பிப்பது எப்படி, இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.