ADDED : அக் 18, 2026 02:38 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரையில் தே.மு.தி.க., சார்பில் 22ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்காக ரயில்வே ஸ்டேஷன் ரோட்டோரம் மேடை அமைக்கப்பட்டு இருபுறமும் ஏராளமான ஒலி பெருக்கிகளும், இருக்கைகளும் அமைக்கப்பட்டன.
ஆனால் மாலையில் துவங்கிய மழை விடாது தொடர்ந்து பெய்தபடி இருந்தது. இரவு வரை காத்திருந்தும் மழை நிற்காத நிலையில் அருகிலுள்ள கடை தாழ்வாரத்தில் ஒதுங்கி நின்றபடி முக்கிய நிர்வாகிகள் பேசி கூட்டத்தை முடித்தனர்.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். தொகுதி பொறுப்பாளர் திருமுருகன், ஒன்றிய செயலாளர்கள் வெள்ளைச்சாமி, ஜெய்லானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
