ADDED : மார் 16, 2026 06:31 AM

திண்டுக்கல்: மாவட்டத்தில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னையில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே மாவட்ட தி.மு.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் ராஜப்பா தலைமை வகித்தார்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, மா.கம்யூ., தேசியக்குழு உறுப்பினர் வாசுகி பங்கேற்று பேசினர். கூட்டணி கட்சிகள் சார்பில்மாநகர் மாவட்ட காங்., தலைவர் துரை மணிகண்டன், மா.கம்யூ., செயலாளர் பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் செயலாளர் மைதீன் பாவா, தே.மு.தி.க., இ.கம்யூ., ம.தி.மு.க., கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங் கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். தி.மு.க., மாவட்ட துணைச்செயலாளர் ராஜாமணி, நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜன், பாலு, தங்கம், பொன்ராஜ், சுப்பிரமணி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பழநி: பழநி தபால் அலுவலகம் முன் தி.மு.க., நகரச் செயலாளர் வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வேடசந்துார்: வேடசந்துார் ஆத்துமேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். காங்., மாவட்ட செயலாளர் சாமிநாதன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வடமதுரை: வடமதுரையில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சவுந்தரபாண்டியன், கரிகால பாண்டியன் முன்னிலை வகித்தனர். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதுபோல் வத்தலக்குண்டில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகன், கனகதுரை, கனிகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர்கள் சின்னதுரை, தங்கராஜன், அருண், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்டில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், சேக் சிக்கந்தர் பாட்சா, பழனிசாமி, நகர செயலாளர் ராஜ்மோகன், அவைத்தலைவர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதுபோல் கோபால்பட்டியில் தி.மு.க., மாவட்ட பொருளாளர் விஜயன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ஜான் பீட்டர், மாவட்ட துணைச்செயலாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
