ADDED : பிப் 13, 2026 06:03 AM
திண்டுக்கல்: ''மத்திய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு என்று நிதி ஒதுக்காமல் இருப்பது. 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் முயற்சி. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு. மக்கள் நலனுக்கு எதிராக மத்திய பா.ஜ., அரசுக்கு ஒத்துழைக்கும் அ.தி.மு.க.,வை கண்டித்து'', தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகர், ஒன்றியப் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
திண்டுக்கல்லில் நாகல்நகர் தண்ணீர் தொட்டி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் ராஜப்பா தலைமை வகித்தார்.
மேயர் இளமதி முன்னிலை வகித்தார். கூட்டணி கட்சியை சேர்ந்த காங்., மாநகர் மாவட்டத் தலைவர் துரை மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் செயலாளர் மைதீன் பாவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பிரபாகரன், மாநகர் செயலாளர் அரபு முகமது, தி.க., நிர்வாகி வீரபாண்டியன், கம்யூனிஸ்ட் மாநகர் செயலாளர் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். தி.மு.க. வடக்கு, தெற்கு, கிழக்கு ஒன்றியம் சார்பில் பழநி பைபாஸ் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றியச் செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன், நிர்வாகிகள் பங்கேற்றனர். பழநி: தாசில்தார் அலுவலகம் முன் மத்திய அரசை கண்டித்து திமுக நகரச் செயலாளர் வேலுமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை விளக்கி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பழநி நகராட்சித் தலைவர் உமாமகேஸ்வர், பழநி நகராட்சி துணைத்தலைவர் கந்தசாமி, திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
