ADDED : ஏப் 09, 2025 03:37 AM
வேடசந்துார், : தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு தமிழக கவர்னர் ஒப்புதல் வழங்காத நிலையில் டில்லி உச்ச நீதிமன்றத்தில் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்ததால் ,வேடசந்துாரில் தி.மு.க., அவைத் தலைவர் ஆரோன் தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகர் தி.மு.க., சார்பில் பஸ் ஸ்டாண்ட் அருகே துணை மேயர் ராஜப்பா தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. மேயர் இளமதி, மாவட்ட அவைத் தலைவர் காமாட்சி, மாநகர் தலைவர் முகமது இப்ராகிம், பொருளாளர் சரவணன் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் பழனிச்சாமி, ரமேஷ், ஜெயமணி, வார்டு செயலாளர்கள் வீரா கணேசன், ரமேஷ், தங்கதுரை, பிரபு, காளீஸ்வரன், ராஜசேகரன், நகர துணை செயலாளர் கிரிஜா, அவைத் தலைவர் பாண்டியன் ஐ.டி.அணி அமைப்பாளர் இளமதி, வீரம்மா கலந்து கொண்டனர்.

