ADDED : ஏப் 22, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி:பழநி நெய்க்காரப்பட்டி பெரியகலையம்புத்துார் பகுதியை சேர்ந்தவர் நரசிங்கபெருமாள் 52. தி.மு.க., நிர்வாகியான இவர் பெருமாள்புதுார் ரோட்டில் இறைச்சி கடை வைத்துள்ளார். இவரது மனைவி நெய்க்காரப்பட்டி பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். நரசிங்கபெருமாள் கடையில் பழநி தாலுகா
போலீசார் சோதனை நடத்தியதில் சாக்கு பையில் பதுக்கி வைத்திருந்த 960 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து நரசிங்கபெருமாளை கைது செய்தனர்.
