ADDED : மார் 14, 2026 07:05 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பகுதியில் சுவர் விளம்பரம் செய்வதில் தி.மு.க., மும்முரமாக உள்ளது.
சட்டசபை தேர்தல் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தி.மு.க., வினர் தேர்தல் பிரசாரங்களில் பலவித முன்னெடுப்புகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். ஒவ்வொரு பூத்திலும் பத்து பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பூத்தில் உள்ள வீடுகளுக்கு நேரிடையாக சென்று தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி ஓட்டு கேட்டு வருகின்றனர்.
இதன் அடுத்த கட்டமாக சுவர்களில் தி.மு.க., சின்னத்தை வரைந்து ஸ்டாலின் அரசின் சாதனைகளை எழுதி வேட்பாளர் பெயர் எழுதப்படாமல் விளம்பரம் செய்து வருகின்றனர். தற்போதைய எம்.எல்.ஏ., வான அமைச்சர் சக்கரபாணிதான் ஒட்டன்சத்திரம் தி.மு.க., வேட்பாளர் என்ற நிலையிலும் கட்சி தலைமை அறிவித்தவுடன் பெயரை எழுதிக் கொள்ளலாம் என்று உள்ளனர்.
