ADDED : பிப் 26, 2026 06:25 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் சட்டசபை தொகுதி தி.மு.க., சார்பில் நாகல்நகரில் 'தமிழ்நாடு தலைகுனியாது' எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில மருத்துவரணி அமைப்பாளர் எழிலன் பேசினார். மாநகர செயலாளர் ராஜப்பா வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளிமலை, மேயர் இளமதி முன்னிலை வகித்தனர்.மாவட்ட நிர்வாகிகள் காமாட்சி, சத்தியமூர்த்தி, பிலால் உசேன் கலந்து கொண்டனர்.
