ADDED : மார் 19, 2026 04:58 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: பெண்கள் குறித்து அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சர்ச்சையாக பேசியதை தொடர்ந்து தி.மு.க., மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் செய்து உருவபொம்மையை எரித்தனர்.
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க.,சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், சீனிவாசன் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியது வைரலானது.
இவர்களின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., மகளிரணி சார்பில் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மகளிரணி அமைப்பாளர் இந்திராணி, அருள்வாணி தலைமை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டது.
