தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆவணம் தயாரிப்பாளர்கள் உச்சி வெயிலில் ஊர்வலம்

 ஆவணம் தயாரிப்பாளர்கள் உச்சி வெயிலில் ஊர்வலம்

 ஆவணம் தயாரிப்பாளர்கள் உச்சி வெயிலில் ஊர்வலம்


ADDED : ஏப் 15, 2026 03:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 03:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை:வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தை 5வது நாளாக புறக்கணித்து போராட்டம் நடத்திய ஆவணம் தயாரிப்பாளர்கள் உச்சி வெயிலில் வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று தேர்தலை புறக்கணிப்பதாக கடிதம் கொடுத்தனர்.

இங்கு 15 ஆண்டுகளாக நிரந்தர சார் பதிவாளர் இல்லாமை உள்ளிட்ட ஏராளமான பிரச்னைகளால் ஆவணம் தயாரிப்போரும், மக்களும் பரிதவிக்கின்றனர். சமீபத்தில் மாறுதல் பணியாக வந்த ஒரு அலுவலர் உள்நோக்கத்துடன் 100க்கு மேற்பட்ட ஆவணங்களை கிடப்பில் வைத்தார்.

இதையடுத்து ஆவணம் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஏப்.8 முதல் ஆவணம் தயாரிப்பு, பதிவு பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். மாவட்ட பதிவாளர் சசிகலா பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று மதியம் சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்தினருடன் வி.ஏ.ஓ., அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று தேர்தலை புறக்கணிப்பதாக கடிதம் தந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us