UPDATED : அக் 14, 2026 07:12 PM
ADDED : அக் 14, 2026 07:08 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுார் தங்கம்மாபட்டி வண்டிகருப்பணசுவாமி கோயிலில் உள்ளேயும், நெடுஞ்சாலையிலும் வைக்கப்பட்டிருக்கும் இரு உண்டியல்களும் 15 மாத இடைவெளியில் திறந்து எண்ணப்பட்டன. ஆர்.வி.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் எண்ணும் பணியில் பங்கேற்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகவேல் தலைமை வகித்தார். கோயில் செயல்அலுவலர் முத்துலட்சுமி, பரம்பரை தர்மகர்த்தா ரங்கநாதன் முன்னிலை வகித்தனர்.
பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையாக ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 786 கிடைத்தது.
