தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழிக்கு பழியாக டிரைவர் கொலை; ஒருவர் கைது

பழிக்கு பழியாக டிரைவர் கொலை; ஒருவர் கைது

பழிக்கு பழியாக டிரைவர் கொலை; ஒருவர் கைது


UPDATED : செப் 01, 2026 10:26 PM

ADDED : செப் 01, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2026 10:26 PM ADDED : செப் 01, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடி கிராமம் மொண்டியபட்டியை சேர்ந்தவர் கரண்ராஜ் 27, டிரைவர். இவருக்கு மனைவி சரண்யா 25, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு குழந்தைபட்டி அருகே தனியார் பள்ளி பின்புறம் அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு கரண்ராஜ் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தாலுகா இன்ஸ்பெக்டர் உலகநாதன், எஸ்.ஐ.,சக்திவேல், போலீசார் 5 மணி நேர தேடுதலுக்கு பின் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.எஸ்.பி., ஜெயக்குமார், டி.எஸ்.பி.,க்கள் சங்கர், கார்த்திக் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து குழந்தைபட்டி வடக்கு தெருவை சேர்ந்த குமரேசனை 41, பிடித்து விசாரித்தனர். பெரியக்கோட்டையை சேர்ந்த முத்தன் என்ற மருதமுத்து 42, பிப்.,ல் வன்னியபட்டி அருகே கொலை செய்யப்பட்டார். அதற்கு கரண்ராஜ் உடந்தையாக இருந்தார். அந்த ஆத்திரத்தில் பழிக்குப்பழியாக கரண்ராஜை கொலை செய்து குளத்தில் வீசியதாக வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us