தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வேன் ஓட்டியபோது மாரடைப்பு தொழிலாளர்களை காத்த டிரைவர்

 வேன் ஓட்டியபோது மாரடைப்பு தொழிலாளர்களை காத்த டிரைவர்

 வேன் ஓட்டியபோது மாரடைப்பு தொழிலாளர்களை காத்த டிரைவர்


ADDED : ஜூன் 07, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 11:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடமதுரை: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வேன் ஓட்டிய டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் வாகனத்தை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

வடமதுரை பி.கொசவபட்டியை சேர்ந்தவர் வேன் டிரைவர் சுப்புராஜ் 36. வேல்வார்கோட்டை நுாற்பாலைக்கு சொந்தமான வேனை 10 ஆண்டுகளாக ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் சிலுவத்துாரில் இருந்து 15 தொழிலாளர்களுடன் வேனை நுாற்பாலைக்கு ஓட்டிச்சென்றார்.

குப்பமுத்துப்பட்டி அருகே சென்ற போது சுப்புராஜ்க்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்த அவர் வேனை ரோட்டோரம் நிறுத்தி விபத்தை தவிரத்தார். சில நொடிகளில் மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதை கண்டு தொழிலாளர்கள் அழுதனர். வடமதுரை போலீசார் விசாரிக் கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us