UPDATED : ஆக 27, 2026 08:52 PM
ADDED : ஆக 27, 2026 08:51 PM
அ நிறம் | அளவு
சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலை சமூக உட்கொணர்வு மையம், கிராம சுகாதாரத் துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
புல தலைவர் வெங்கட் ரவி தலைமை வகித்தார். கிராம சுகாதாரத் துறை பொறுப்புத் தலைவர் மகாலிங்கம் வரவேற்றார். சமூக உட்கொணர்வு மைய பொறுப்பு இயக்குனர் ராஜா பிரான்மலை முகாமின் நோக்கம் குறித்து பேசினார். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது. மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
