UPDATED : ஆக 04, 2026 08:46 PM
ADDED : ஆக 04, 2026 08:33 PM
அ நிறம் | அளவு
நத்தம்:நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் இந்திய அரசின் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சகம் மை பாரத் மூலம் பிரதம மந்திரியின் போதைப்பொருள் விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள் முன்னிலை வகித்தார். கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம், மைபாரத் ஒருங்கிணைப்பாளர் சங்கரழகு, துணை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட இளைஞர் நல அலுவலர் சிவசண்முகம், ராகவன் ஆகியோர் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
