/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
/
போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஜன 31, 2026 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, கள்ளச்சாராயம், போதைப் பொருள் தடுப்பு, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் அரசு, தனியார் பஸ்களில் விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமை வகித்து பிரசாரத்தை துவக்கி வைத்தார். போலீசார், ஆர்.டி.ஓ., அதிகாரிகள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். தொடர்ந்து பஸ்களில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு 'ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டன.

