ADDED : பிப் 10, 2025 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாவட்ட இளைஞரணி சார்பில் போதை ஒழிப்பு பிரசார துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட செயலாளர் நியாஜ்தீன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நைனா முகமது, மாணவரணி செயலாளர் ரபியூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் ஜமால் முகமது தொடங்கி வைத்தார்.முன்னதாக எம்.பி.,க்கள் திருமாவளவன், சச்சிதானந்தம் ஆகியோரிடம் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அப்துல் ஹாலிக் பங்கேற்றனர்.

