ADDED : ஏப் 24, 2026 04:02 AM

அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த ராமநாதபுரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் 58, மாரடைப்பால் இறந்தார்.
ஒட்டன்சத்திரம் தொகுதி இடையகோட்டை, கள்ளிமந்தையம் பகுதிகளில் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் பணியில் இருந்தார். நேற்று மாலை இடையகோட்டையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வாகனத்தில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த போது காளாஞ்சிபட்டி அருகே நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இறந்தார்.
ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
