ADDED : ஏப் 23, 2026 10:53 PM

அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த ராமநாதபுரம் போதைப்பொருள் தடுப்பு குற்றப்புலனாய்வுத்துறை டி.எஸ்.பி., மாரடைப்பால் இறந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி இடையகோட்டை, கள்ளிமந்தையம் பகுதிகளில் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன், 58, பணியில் இருந்தார். நேற்று மாலை, இடையகோட்டை அருகே வாகனத்தில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தபோது, காளாஞ்சிபட்டி அருகே நெஞ்சு வலிப்பதாக கூறி உள்ளார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இரவு உயிரிழந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
