/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இரட்டை பதிவு வாக்காளர்கள் 12,213
/
இரட்டை பதிவு வாக்காளர்கள் 12,213
ADDED : நவ 05, 2025 01:00 AM

திண்டுக்கல்: வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் இரட்டை முறை பதிவு கொண்ட 12,213 வாக்காளர்கள் உள்ளதாக அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ., தென்னம்பட்டி பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் மலர்வண்ணன், ஜான் போஸ், தண்டாயுதம், லட்சுமணன், பேரூர் செயலாளர்கள் பாபு சேட், பாலசுப்பிரமணி, அறிவாளி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜமோகன் ஆகியோர் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.
பாசறை மாநில செயலாளர் பரமசிவம் கூறியதாவது: வேடசந்தூர் தொகுதியில் 2,74,158 ஓட்டுகள் உள்ளன.
ஒரு மாதமாக தொகுதி முழுவதும் எங்களது கட்சியினர் இரட்டை ஓட்டுகள் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்ததில் 12,213 இரட்டை ஓட்டு உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் ஒரே நபர் 3 இடங்களில் ஓட்டுப்பதிவு வைத்துள்ளார். கலெக்டரிடம் இரட்டை ஓட்டு உள்ளவர்கள் குறித்து படிவங்களை ஒப்படைத் துள்ளோம்.
முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும் நியாயமான முறையில் புதிய வாக்காளர்கள், வாக்காளர்கள் சரி பார்க்கும் பணி அரசு அதிகாரிகளால் நடைபெற வேண்டும் என வலியுறுத்தினோம் என்றார்.

